1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (23:13 IST)

செல்வராகவன் அற்புதமான நடிகர்...இயக்குநர் புகழாரம்

இயக்குனர் செல்வராகவன் தான் ஒரு படத்தில் நடிக்கபோவதாக அறிவித்த போதே அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

செல்வராகவன் போன்ற தேர்ந்த இயக்குனரை தன் கதையின் மூலம் நடிக்க சம்மதிக்க வைத்த அந்த இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

இந்நிலையில் சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவன் நடிப்பு குறித்து இப்படத்தின் இயக்குநர் அருண்மாதேஸ்வரன் பாராட்டியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பகக்த்தில், செல்வராகவன் சிறந்த நடிகர்.ஒவ்வொரு நடிகரும் சிறந்த நடிகர் என்றாலும் அவர் அற்புதமான நடிகர் எனத் புகழ்ந்துள்ளார்