புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj

தனுஷுன் இளமை....18 ஆண்டுகள் கழித்து போட்டோவை பதிவிட்ட சகோதரி

செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த2002 ஆம் ஆண்டு வெளியான படம் துள்ளுவதோ இளமை. இப்படத்தில்தான் தனுஷ் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

தற்போது, கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பிஸியாக நடித்துக்கொண்டு, பாடலாசிரியர், தயாரிப்பாளார், திரைக்கதை ஆசிரியர், பாடகர் எனப் பன்முகத்திறமை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் தனுஷின் சகோதரி கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

இதில், அவர், இப்படம் 2003 ஆம் ஆண்டு எடுத்தது என்று கூறி தனுஷ் எவ்வளவு இளமையுடன் அப்பாவியாக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷின் நடிப்பில் கர்ணம், மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் ரிலிஸுக்கு தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தகக்து.