வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (07:10 IST)

400 திரையரங்குகளில் ரிலிஸாகும் நெஞ்சம் மறப்பதில்லை!

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இன்று 400 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம்.

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் முடங்கிய பல படங்களில் இந்த படமும் ஒன்றாக அமைந்தது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய என் ஜி கே படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் எல்லாப் பிரச்சனைகளும் முடிந்து படம் இன்று உலகமெங்கும் 400 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸாக உள்ளதாம். மாஸ்டருக்குப் பின் மிகப்பெரிய அளவில் ரிலிஸாகும் படமாக நெஞ்சம் மறப்பதில்லை இருக்கும் என சொல்லப்படுகிறது.