1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (20:42 IST)

தடைகளை தகர்த்து திட்டமிட்டபடி ரிலீஸாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்ததால் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மார்ச் 5ஆம் தேதி இந்தப் படம் உறுதியாக ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கியது. ஆனால் நேற்று திடீரென நீதிமன்ற உத்தரவின் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் தடைகளை தகர்த்து நாளை மறுநாள் திட்டமிட்டபடி நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது