திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 ஜனவரி 2019 (10:37 IST)

உள்ளேப் பனிப்போர்; வெளியே சமாதானம் – என்.ஜி.கே. அப்டேட்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதை அடுத்து அப்படத்தின் இயக்குனர் செல்வராகவன் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் என்.ஜி.கே படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. விறு விறுவென படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படம் தீபாவளிக்கு ரிலிஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இடையில் செல்வராகவனின் உடல்நிலை, மற்றும் சிலக் காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் அந்த நேரத்தில் ரிலிஸான ஒருப் படத்தில் உள்ள சிலக் காட்சிகள் என்.ஜி.கே. படத்தின் காட்சிகள் போலவே அமைந்திருந்ததால் படக்குழு அதிர்ச்சியானது. அதனால் படம் பிடித்த சிலக்  காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இதற்கிடையில் சூர்யாவின் கால்ஷீட் முடிந்து விட சூர்யா தனது அடுத்தப்படமான கே.வி. ஆனந்தின் காப்பான் ஷூட்டிங்கிற்கு சென்று விட்டார். அதனால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் உருவானது. இதனால் சூர்யா மற்றும் செல்வராகவன் இடையே உரசல் உண்டானது. தெளிவான திட்டமிடாமல் படப்பிடிப்பு நடத்தி வந்த செல்வராகவனின் வேலைப் பாணியும் சூர்யாவிற்குப் பிடிக்கவில்லை.

அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட இருவரும் பேசிக்கொள்ளாமல் இடைத்தரகர் ஒருவர் மூலமாகவே கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இதையடுத்து பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டிப் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து செல்வராகவன் டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். ஒரு வழியாகப் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து சூர்யாப் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து தங்க நாணயம் வழங்கியுள்ளார்.