திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 13 ஜனவரி 2019 (20:17 IST)

விஜய்யை அடுத்து சூர்யா கொடுத்த 'கோல்ட் காயின்'

தளபதி விஜய் சமீபத்தில் ஒருசில குறிப்பிட்ட ஊடகவியலார்களுக்கு கோல்ட் காயின் கொடுத்தார் என்பது தெரிந்ததே. விஜய் கொடுத்த கோல்ட் காயின் ஒருசில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது

இந்த நிலையில் விஜய்யை அடுத்து சூர்யாவும் நேற்று 120 பேர்களுக்கு கோல்ட் காயின் கொடுத்துள்ளார். ஆனால் சூர்யா கொடுத்தது 'என்.ஜி.கே' படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

'என்.ஜி.கே' படத்தில் பணிபுரிந்த பெரிய டெக்னீஷியன்கள் முதல் டிரைவர், கிளாப் அடிப்பவர் வரை அனைவருக்கும் ஒரு நபருக்கு கூட விட்டுப்போகாத வகையில் கோல்ட் காயின் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சூர்யாவின் இந்த தாராள தங்க மனதை படக்குழுவினர் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் முடிந்தவுடன் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவிருப்பதாகவும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.