திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 13 ஜனவரி 2019 (07:56 IST)

சூர்யாவின் என்.ஜி.கே. குறித்து செல்வராகவன் டுவீட்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வந்த 'என்.ஜி.கே' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்றே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செல்வராகவன் உடல்நிலை மற்றும் சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதமாகியதால் இந்த படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இதனால் படக்குழுவினர் மீது சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

என்.ஜி.கே' படத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட 'காப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலைக்கு வந்தபின்னரும் 'என்.ஜி.கே; குறித்த எந்த தகவலும் வராத நிலையே இருந்தது

இந்த நிலையில் ஒருவழியாக இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குனர் செல்வராகவன் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். சூர்யாவுடன் பணிபுரிந்த அனுபவம் தனக்கு இனிமையாக இருந்ததாகவும், உண்மையிலேயே மிகத்திறமையான நடிகரான அவருடன் செய்த இந்த பயணம் தனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு இனிவரும் சில நாட்களில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா, ரகுல்ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடித்துள்ளனர்.