திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2024 (07:52 IST)

விஜய்க்காக என்னுடைய படத்தின் டைட்டிலை மாற்றிக்கொண்டோம்… நடிகர் சதீஷ் பகிர்ந்த தகவல்!

பிரபல காமெடி நடிகர் சதீஷ் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த கான்ஜூரிங் கண்ணப்பன் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்துக்குப் பிறகு சதீஷ் ஹீரோவாக மற்றொரு திகில் மற்றும் காமெடி திரைப்படமான ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களுக்கு அடுத்து அவர் இப்போது வித்தைக்காரன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்துக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை.

இந்நிலையில் இந்த படத்துக்கு முதலில் வித்தைக்காரன் The GOAT என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் விஜய்யின் படத்துக்கு GOAT என தலைப்பு வைக்கப்பட்டதால் தன் படத்துக்கு வித்தைக்காரன் என்று பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளார். அவர் மீதுள்ள அண்பின் காரணமாக இதை நாங்கள் செய்தோம் எனக் கூறியுள்ளார்.