1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2023 (12:21 IST)

ஏஜிஎஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் சதீஷ் ஹீரோ.. டைட்டில் போஸ்டர் ரிலீஸ்..!

தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 என்ற திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில் இன்னொரு திரைப்படத்தின் அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
 
ஏஜிஎஸ் நிறுவனத்தின் 24 ஆவது திரைப்படமான ஏஜிஎஸ் 24 என்ற படத்தில் சதீஷ் மற்றும் ரெஜினா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு காஞ்ஜூரிங் கண்ணப்பன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  இந்த படத்தில் நாசர் சரண்யா பொன்வண்ணன் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த நாய் சேகர் திரைப்படத்திலும் சதீஷ் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva