திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (14:42 IST)

வித்தியாசமான ப்ரோமோவை வெளியிட்ட கான்ஜூரிங் கண்ணப்பன் படக்குழு!

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த நாய் சேகர் திரைப்படத்திலும் சதீஷ் நாயகனாக நடித்திருந்தார். இதையடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் 24 ஆவது திரைப்படமான காஞ்ஜூரிங் கண்ணப்பன் என்ற படத்தில் சதீஷ் நடிக்கிறார்.

பேய் நகைச்சுவை படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் ஆச்சர்யப்படதக்க வகையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் 9 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது சதீஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.