தனுஷுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்… அர்ஜுன் வேற இருக்காரா? – வெளியான தகவல்!
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைக் குவித்து நல்ல வசூலை ஈட்டியுள்ளது. 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
அந்த படம் ரிலீஸாகி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை விக்னேஷ் ராஜா அறிவிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தில் வில்லனாக நடிகர் ஜெயரம் நடிக்கவுள்ளாராம். மேலும் படத்தில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் அர்ஜுனும் நடிக்கிறாராம். விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.