அஜித்திற்கு விடுதலை சிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்..!

Last Modified வியாழன், 1 நவம்பர் 2018 (16:41 IST)
தமிழ் சினிமாவில் மக்களால் மிகவும் விரும்பப்படும் இளம் ஹீரோ சிவகார்த்திகேயன். இவர், தற்போது எம்.ராஜேஷ் இயக்கும் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த படத்தில் நடித்து வருகிறார்.  இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாராவை நடித்து வருகிறார். இதற்கிடையில் ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ்பிக்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில்  சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக   இப்போது தகவல் பரவியுள்ளது. 2019 ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அஜித்தை வைத்து  சிவா இயக்கியுள்ள  'விசுவாசம்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி  பொங்கல் உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :