சிவகார்த்திகேயனின் 15வது படத்தில் 'இரும்புத்திரை' கூட்டணி
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 13வது மற்றும் 14வது படங்களை இயக்குனர்கள் ராஜேஷ் எம் மற்றும் ரவிகுமார் ஆகியோர் இயக்கி வரும் நிலையில் அவருடைய 15வது படத்தை 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை 'ரெமோ' , சீமராஜாஅ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த 24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் 'இரும்புத்திரை' படத்தில் பணிபுரிந்த ஆக்சன் கிங் அர்ஜூன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ், படத்தொகுப்பாளர் ரூபன் ஆகியோர்களும் பணிபுரியாவுள்ளனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், இந்த படமும் ஒரு வித்தியாசமான டிஜிட்டல் குற்றம் ஒன்றை அலசவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.