இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்ஷன்!
நடிகர் பிருத்விராஜ், மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். அதன் இரண்டாம் பாகம் தற்போது எம்புரான் என்ற பெயரில் கடந்த 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.
முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 350 திரைகளில் ரிலீஸானது. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு மலையாளப் படமும் இத்தனை அதிக எண்ணிக்கையில் ரிலீஸானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் ரிலீஸான பின்னர் சுவாரஸ்யமில்லாத திரைக்கதை மற்றும் மேக்கிங் காரணமாக கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் எம்புரான் திரைப்படம் முதல் நாளில் சுமார் 22 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் கலவையான விமர்சனங்களைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் வசூல் அடிவாங்கியுள்ளது. இரண்டாம் நாளில் சுமார் 11 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.