என்னது சசிகலாவா? அவுங்க கேரக்டர்ல நடிக்க முடியாது.. பிரபல நடிகை தடாலடி

sasikala
Last Modified வியாழன், 1 நவம்பர் 2018 (12:49 IST)
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சசிகலா கேரக்டரில் தாம் நடிக்க முடியாது என ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா, பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் பெண் இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு 'தி அயர்ன் லேடி' என்று டைட்டில் வைக்கப்பட்டு ஜெயலலிதா வேடத்தில் நித்யாமேனன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
jayalalitha
சமீபத்தில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன் தனது ஃபேஸ்புக்கில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தாங்கள் தயாரிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்குவார் என கூறியிருந்தார். இப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நயன்தாராவும், சசிகலா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.
rajesh
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்காக யாரும் என்னை அணுகவில்லை, ஒரு வேலை அணுகினாலும் சசிகலா வேடத்தில் நான் நடிக்க மாட்டேன் என நெத்திப்பொட்டில் அடித்தவாறு சடாரென கூறிவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :