ஒடாத படத்திற்கு பார்ட் டூ எதற்கு –கேலிக்குள்ளான மாரி 2 போஸ்டர்

Last Updated: வெள்ளி, 2 நவம்பர் 2018 (18:30 IST)
தனுஷ் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை கேங்ஸ்டர் திரைப்படம் மாரி. கலவையான விமர்சனங்களையும் சுமாரான வசூலையும் பெற்ற மாரிப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி வருகிறது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர், மைம் கோபி எனப் பலர் நடித்த திரைப்படம் மாரி. நம் காலத்தின் சிறந்த குறும்பு கேங்ஸ்டர் என்ற அடைமொழி வெளியான தனுஷின் மாரி எந்த அதிர்வையும் ஏற்படுத்தாமல் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனது. அந்த படத்தின் சிறப்பம்சம் என சொல்லக்கூடியது ஒன்று உண்டு என சொன்னால் அது அனிருத்தின் இசைதான். அனிருத் இசையில் மாரிப் படத்தின் அத்தனைப் பாடல்களும் செம ஹிட்.

தற்போது மூன்று வருடங்கள் கழித்து மாரி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. கிட்டத்தட்ட அதேப் படக்குழுவினர் பணிபுரியும் இந்த படத்தின் ஹீரோயினாக பிரேமம் புகழ் சாய் பல்லவி இணைந்துள்ளார். அதேப் போல படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணிபுரிந்து வருகிறார்.

எப்போதுமே நன்றாக ஓடி வசூல் சாதனை செய்த படத்திற்குதான் பார்ட் 2 எனப்படும் சீக்வெல்லோ அல்லது ப்ரிக்வல்ல்லோ வரும். அதன் அடிப்படையில்தான் சிங்கம் 2, சாமி 2, பில்லா 2 போன்ற படங்கள் வரும். ஆனால் இப்போது உருவாகி வரும் மாரி படத்தின் பார்ட் 2 படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் தற்ப்பொது வெளியாகி உள்ளது. குறும்பு தாதா இஸ் பேக் என்ற அடைமொழியோடு இந்த படத்தின் போஸ்டரை தனுஷ் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஓடாத படத்திற்கு செகண்ட் பார்ட் எதற்கு என நெட்டிசன்கள் சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :