வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 6 நவம்பர் 2018 (13:41 IST)

தளபதி தீபாவளி..! சர்கார் திரைவிமர்சனம்..!

தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கிறது. இதனால் தளபதி  ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த தீபாவளியை சர்கார் தீபாவளியாக அவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 
திரைவிமர்சனம்:
 
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு என பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.
 
படக்கதை :  மிக பெரிய நிறுவனத்தின் CEO-வாக அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த தமிழனாக வாழ்ந்து வருகிறார் தளபதி விஜய். தான் நினைப்பதை சாதிக்கும் கார்ப்பரேட் நாயகனாக வில்லத்தனம் கலந்த வேடத்தில் நடித்துள்ளார். இவர் இந்திய தேர்தலில் தன்னுடைய ஓட்டை பதிவு செய்வதற்காக இந்தியா வருகிறார்.
 
ஆனால் தன்னுடைய ஓட்டை தனக்கு முன்பாகவே வேறொரு அரசியல் கட்சியினர் பதிவு செய்துள்ளனர். பின்னர் விஜய் அதிகாரிகளுடன் எவ்வளவு போராடியும் தன்னுடைய ஓட்டை பதிவு செய்ய அனுமதிக்கவில்லை.
 
இதனையடுத்து விஜய்க்கும் எதிர் அரசியல் அணிக்கும் இடையே என்ன நடக்கிறது? இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள்? என்பது தான் சர்கார் படத்தின் கதை.
 
இதைத்தொடர்ந்து கடன் வாங்கியதால், தீக்குளிக்கும் குடும்பத்தை நேரில் பார்க்கிறார். மேலும் வில்லனாக வரும் அரசியல்வாதியிடம்அவர் விடும் சவாலால் தான் அவரை போராளியாக மாற்றுகிறது. 
 
தளபதி நடிப்பில் வழக்கம் போல மாஸ் காட்டியுள்ளார். அரசியல் வசனங்கள் திரையரங்கை அதிர வைக்கின்றன. பன்ச் டயலாக்குகள் நம்மை பரபரப்பாக்குகிறது. விஜயின் டைலாக் டெலிவரியில் மாற்றம் செய்ய முயன்றுள்ளனர்.
 
இயக்குனர் முருகதாஸ் படம் என்றாலே பெரும்பாலும் ஹீரோவுக்கு தான் மவுசு இருக்கும். அதேபோல் தான் இந்த படத்திலும் விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் கீர்த்தி சுரேஷிற்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கவில்லை. விஜய்மற்றும் கீர்த்தியின் காதல் காட்சிகள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தனக்கு கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தில் கீர்த்தி கட்சிதமாக நடித்துள்ளார். 
 
அதிரடியான நடிப்பை வரலட்சுமி வெளிகாட்டியுள்ளார். சண்டக்கோழி 2 படத்திற்கு பிறகு வரலட்சுமி சரத்குமார் வில்லியாக மீண்டும் அவதாரம் எடுத்துள்ளார். தன்னுடைய கதாபாத்திரத்தை கட்சிதமாக நடித்து கொடுத்துள்ளார். முதல் பாகத்தில் இருந்தே வரலட்சுமியின் காட்சிகள் இடம் பெற்று இருந்தால் இந்த படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
 
அரசியல் தலைவராக நடித்துள்ள ராதாரவி விஜய்க்கும் இடையேயான காட்சிகள் திரையரங்கை அதிர வைக்கின்றனர்.
 
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் மேஜிக் மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் மாஸ் காட்டியுள்ளது.
 
ஒரு விரல் புரட்சி ரசிகர்களுக்கு புது பாடம் புகட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த பாடல் அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
 
இயக்குனர் முருகதாஸின் ஸ்ட்ராங்கான கதை, திரைக்கதை, வசனம் கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து சர்கார் படத்திலும் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு  சிறு ஏமாற்றம் தான்.
 
விஜயின் சர்கார் திரைப்படத்தில் மசாலா காட்சிகள் அதிகம் இருந்தாலும், விஜய் என்ற மாஸ் ஹீரோவை வைத்து படத்தில் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள்.