செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (17:25 IST)

மீண்டும் தமிழில் ஒரு டைம் டிராவல் படம்: டிக்கிலோனா டிரைலர்

மீண்டும் தமிழில் ஒரு டைம் டிராவல் படம்: டிக்கிலோனா டிரைலர்
நடிகர் சந்தானம் 3 வேடங்களில் நடித்துள்ள ’டிக்கிலோனா’ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்றுமுன் ’டிக்கிலோனா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மூன்று வித்தியாசமான வேடங்களில் சந்தானம் நடித்துள்ள இந்த படம் ஒரு டைம் டிராவல் டைம் என்பது ட்ரெய்லரில் இருந்து உறுதியாகியுள்ளது 
 
ஏற்கனவே சூர்யா நடித்த ’24’ விஷ்ணு விஷால் நடித்த ’இன்று நேற்று நாளை’ ஆகியவை தமிழில் டைம் ட்ராவல் படங்களாக வெளிவந்துள்ள போதிலும் இந்த படம் முற்றிலும் வித்தியாசமாக ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சந்தானம் தனது வாழ்க்கைக்கு திரும்பி அவரது வாழ்க்கையில் நடந்த கல்யாணம் என்ற சம்பவத்தை தடுத்து நிறுத்துவதே இந்த படத்தின் கதையாக இருப்பதால் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
முழுக்க முழுக்க காமெடி கலந்த வித்தியாசமான டெக்னாலஜி கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவின் ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது