திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (09:02 IST)

கன்னட திரையுலகில் நுழைந்தார் யோகிபாபு - வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சுபார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் யோகி பாபு தமிழ் , தெலுங்கு , இந்தி  மொழி படங்களில் நடித்ததை அடுத்து தற்ப்போது கன்னட மொழி படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஆம், அதை உறுதிப்படுத்தும் விதத்தில் நடிகர் யோகி பாபு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், துனியா விஜய் ஆகியோரையும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கூடிய  விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பாரக்கலாம். இந்திய சினிமாவில் ஆல் ரவுண்டு அடிக்கும் யோகி பாபுவை கண்டு அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.