வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 29 ஜனவரி 2019 (23:54 IST)

'துப்பாக்கி 2' படத்தில் விஜய் மகன் சஞ்சய்?

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான முதல் படமான 'துப்பாக்கி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை மாதமிருமுறை ஒரு தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பி வந்தாலும், அத்தனை தடவையும் முழு படத்தையும் உட்கார்ந்து பார்க்க ஒரு கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 'துப்பாக்கி 2' படம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மீண்டும் ஒரு படத்தில் விஜய்யும் ஏ.ஆர்.முருகதாஸும் இணையவுள்ளதாகவும், அந்த படம் துப்பாக்கி 2' படமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஆனால் விஜய் தற்போது 'தளபதி 63' படத்திலும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினி படத்திலும் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு விஜய்-முருகதாஸ் கூட்டணி ஏற்பட வாய்ப்பு குறைவு. இந்த நிலையில் ரஜினி படத்தை முடித்தவுடன் 'துப்பாக்கி 2' படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக அவரது மகன் சஞ்சய்யை நடிக்க வைக்க திட்டம் ஒன்று உள்ளதாகவும் முருகதாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இது வதந்தியா? அல்லது உண்மையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்