வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 27 ஜனவரி 2019 (17:07 IST)

பாஜகவில் இணைந்த விஜய்-விஜயகாந்த் பட நாயகி

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வரும்போது திரையுலக நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் அரசியல் கட்சிகளில் இணைவது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஏற்கனவே மோகான்லால் உள்பட ஒருசில பிரபல நடிகர்களும், நடிகைகளும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அரசியலில் குதிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் பிரபல நடிகை இஷா கோபிகர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கலந்து கொண்ட நிலையில் அவர் முன் நடிகை இஷா கோபிகர் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டு அக்கட்சியின் உறுப்பினர் அட்டையையும் பெற்றுக்கொண்டார்
 
நடிகை இஷா கோபிகர் விஜயகாந்த் நடித்த 'நரசிம்மா', விஜய் நடித்த 'நெஞ்சினிலே', அகத்தியன் இயக்கிய 'காதல் கவிதை, 'பிரசாந்த் நடித்த 'ஜோடி, போன்ற தமிழ்ப்படங்களிலும், ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.