புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (14:56 IST)

விஜய் மகன் சஞ்சய் ஷங்கர் படத்தில் நடிக்கிறாரா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். அவரின் மகன் ஜேசன் சஞ்சய் ஷங்கர் இயக்கத்தில் தமிழ் படம் ஒன்றில்  நடிக்கவிருப்பதாக தகவல் உலா வந்துகொண்டிருக்கிறது. 


 
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்  தற்போது கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து வருகிறார். பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தனது தாத்தா, அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக பயிற்சி எடுத்து வருகிறார். 
 
ஜேசன் சஞ்சய் நீண்ட நாட்களாக சினிமாவில் அறிமுகமாவார் என்ற பேச்சு உள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்கா வண்ணம், ஜங்ஷன், சிரி போன்ற குறும்படங்களை இயக்கி நடித்திருந்தார் , இந்தக் குறும்படங்களுக்கு அப்பாவின் ரசிகர்களிடமிருந்து  நல்ல வரவேற்பு கிடைத்தது. .
 
இந்நிலையில்,  தற்போது இணயத்தில் உலா வந்துகொண்டிருக்கும் தகவல் என்னவென்றால் விஜய் மகன் சஞ்சய் புதிய தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் அதனை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கப்போவதாகவும் பேசப்படுகிறது.  இத்தகவல் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. 
 
ஆனால் விஜய் தரப்போ, அல்லது ஷங்கர் தரப்போ இதுதொடர்பாக விளக்கம் அளித்தால் மட்டுமே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
 
இப்படி தான் சமீபத்தில் சூர்யா மகன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அது உண்மையல்ல என்று சூர்யா தரப்பினர் உடனடியாக விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.