1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 28 ஜனவரி 2019 (21:18 IST)

மிர்ச்சி விஜய்க்கு டும் டும் டும் காதலிச்சது யாரை தெரியுமா?

ஆர்ஜேவாக மீடியா உலகிற்கு என்ட்ரி கொடுத்த விஜய்  தற்போது விஜேவாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார். 


 
ரேடியோ மிர்ச்சி FM ஸ்டேஷனில் ஆர்ஜேவாக இருந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி  பலருக்கும் பரிட்சயமான குரல் தான் ஆர்ஜே விஜய். பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளர், விருது வழங்கும் விழா என  களத்தில் இறங்கி பட்டி தொட்டியெங்கும் தன்னை பரீட்ச்சிய படுத்திக்கொண்டார். தற்போது இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் Vs டான்ஸ் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார் . 
 
தனது கெரியரை ஓரளவிற்கு நிலைநிறுத்திக்கொண்ட விஜய் தற்போது தன் வாழ்வின் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துவிட்டார். ஆம், கணவராக தனது வாழ்க்கையை துவங்க உள்ளார்.  இரண்டு வருடமாக காதலித்து வந்த மிர்ச்சி மோனிகா என்கிற பெண்ணை கரம் பிடிக்கவுள்ளாராம் விஜய் . தனது காதல் குறித்து மிர்ச்சி விஜய் கூறும்போது, 
 
மோனிகா  என் ஃப்ரெண்ட்டோட ஃப்ரெண்ட். நான் கலந்துகிட்ட ஒரு நிகழ்ச்சியில் அவங்க எனக்கு அறிமுகமானாங்க. அதுக்கப்புறம் ஃப்ரெண்ட்ஸா பேச ஆரம்பிச்சோம். நல்ல நண்பர்களாக ஆரம்பித்த எங்களுடைய பயணம் காதலில் கரைசேர்ந்தது.  இரண்டு வருஷமா காதலிக்கிறோம். இப்போ காதல், கல்யாணத்தை எட்டியிருக்கு! அவ்வளவு தாங்க!”  என்று புன்னகையுடன் கூறியுள்ளார். 


 
மேலும்,  பிப்ரவரி 9ம் தேதி எங்களுக்குத் திருமணம் .  ஃபேமிலி மற்றும்  ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான் கல்யாணத்துக்கு கூப்டுறோம். ரொம்ப சிம்பிளா கல்யாணம் பண்ணப்போறோம் . கல்யாணத்துக்கான வேலைகள் இப்போ தான் கொஞ்ச, கொஞ்சமா ஆரம்பிச்சிருக்கோம். உங்க எல்லோருடைய ஆசிர்வாதமும் எங்களுக்கு வேணும் என்று விஜய் கூறியுள்ளார்.