1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Sanikayitham ott release date

சாணிக் காயிதம் ஓடிடி ரிலிஸ்… வெளியான முக்கியத் தகவல்!

சாணிக் காயிதம்
செல்வராகவன் நடிகராக அறிமுகமாகியுள்ள  சாணிக்காயிதம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என தெரிகிறது.

இயக்குனர் செல்வராகவனும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தபோது கொரோனா இரண்டாவது அலை வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து பின்னர் மீண்டும் தொடங்கி முடிந்துள்ளது.

இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஓடிடி வெளியீட்டுக்கு முயற்சி நடக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படத்தின் பின்னணி இசையமைப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் மார்ச் 25 அல்லது ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் ஒன்றில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக அதிகவாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
வெளிநாட்டுக்கு பறக்கப் போகும் தலைவர் 169 படக்குழு!