புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (10:02 IST)

கொரோனாவால் நான் கற்றுக்கொண்டவை... நைரா பேபியுடன் நெகிழ்ச்சி சமீரா

சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றவர் நடிகை சமீரா ரெட்டி. தொடர்ந்து வெடி, வேட்டை , நெடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்தார்.

ஆனாலும், முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அதையடுத்து கடந்த மாதம் ஜூலை 12ம் தேதி ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் எப்போதும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் சமீரா ரெட்டி அவ்வப்போது மகள் நைரா மற்றும் மகனின் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது, அன்பு மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு "இந்த கொரோனா வைரஸ் " எளிய விஷயங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்" என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தது. மேலும், நல்ல விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்" என்பது தான். என்று அழகான கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.