புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (09:59 IST)

ஆபாச நடிகை மியா கலிஃபா தற்கொலை....? வதந்திக்கு அவரே கொடுத்த பதிலடி!

நடிகை சன்னி லியோனிற்கு அடுத்து ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் கொடிகட்டி பறந்து வந்த மியா காலிஃபாவும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நீண்டகால காதலரான ராபர்ட் சென்ட்பெர்க் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

மேலும், ஆசாமிகள் சிலர் கொலைமிரட்டல் விடுத்ததால் அதுபோன்ற படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தற்ப்போது  விளையாட்டு வர்ணனையாளராக வேலை செய்து வருகிறார். இதற்கிடையில் இணையவாசி ஒருவர்  "மியா கலிஃபா தற்கொலை செய்து கொண்டார் RIP" என்று பொய்யான தகவலை பதிவிட்டு வதந்தியை பரப்பினார்.

இதை கேட்டு  மியா கலிஃபாவின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்த வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்த மியா,   "எனது நண்பர்கள் யாரெல்லாம் இன்னும் எனக்கு இரங்கல் பூங்கொத்து கொடுக்கவில்லை என்று கவனித்துக் கொண்டே இருக்கிறேன்" என செம ஸ்மார்ட்டாக பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களாகவே தீயாக பரவி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.