1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (09:50 IST)

ஊருக்கே பருப்பு ஆனாலும் வீட்டுக்கு... இந்த விஷயத்துல அஞ்சனா ரொம்ப Lucky - வீடியோ!

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனாவுக்கும் கயல் பட ஹீரோ சந்திரனுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டார் அஞ்சனா.

அதையடுத்து ருத்ராக்ஸ் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பிறகு முழுமையாக வீட்டில் ஓய்வெடுத்து  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பெரிய கேப் விட்டிருந்தார். அதையடுத்து மகன் கொஞ்சம் வளர்ந்ததும் இரண்டாது இன்னிங்க்ஸை துவங்கிவிட்டார்.

மீண்டும் களத்தில் இறங்கி புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கணவர் சந்திரன் சமையல் செய்யும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அஞ்சனா " பாட்டு கேட்காம வேலை பார்க்க மாட்டாராம்.. சேப்பக்கிழங்கு வறுவல் செய்வதில் என் புருஷன் வல்லவர்" என  புகழாரம் சூட்டியுள்ளார். இதனை கண்டா நெட்டிசன்ஸ் " ஒரு ஹீரோவை இப்படி ஆக்கிடீங்களே.. அது சரி ஊருக்கே பருப்பு ஆனாலும் வீட்டுக்கு அடிமை தான்" என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.