வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (14:02 IST)

வெள்ளை கவுன், முகம் நிறைய சோகம்: சமந்தா முதல் பதிவு

விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் சமந்தா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 
 
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. ஆனால் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். சொல்லப்போனால் தனது கணவரை விட பிஸியான நடிகையாக இருந்தார்.
 
ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவருக்கும் சைதன்யாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. அதை இப்போது இருவரும் உறுதி செய்தனர். இந்நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வெள்ளி கவுன் அணிந்து சோகமாக காட்சியளிக்கிறார்.