வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 4 அக்டோபர் 2021 (15:33 IST)

மீண்டும் டிவிட்டரில் பெயரை மாற்றிய சமந்தா!

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. ஆனால் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். சொல்லப்போனால் தனது கணவரை விட பிஸியான நடிகையாக இருந்தார்.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவருக்கும் சைதன்யாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. அதை இப்போது இருவரும் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் திருமணத்துக்கு பின்னர் தனது பெயரை சமூகவலைதளங்களில் சமந்தா அக்கினேனி என மாற்றிக்கொண்டார் சமந்தா. ஆனால் இப்போது மீண்டும்  சமந்தா பிரபு என மாற்றிக்கொண்டுள்ளார்.