1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 அக்டோபர் 2021 (12:38 IST)

சமந்தா விவாகரத்துக்கு காரணம் இந்த நடிகர்தான்! – சூசகமாக சொன்ன கங்கனா!

நடிகை சமந்தா – நாக சைதன்யா பிரிவுக்கு காரணம் பிரபல நடிகர்தான் என கங்கனா ரனாவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகள் முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தங்கள் விவாகாரத்தை அறிவித்துள்ளனர். இது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சமந்தா விவாகரத்து குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகை கங்கனா ரனாவத் நாக சைதன்யாவுக்கு விவாகரத்துக்கு வழிகாட்டியவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் தான் என்று குறிப்பிட்டுள்ள கங்கனா, அந்த நடிகரை பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று பதிவிட்டு உள்ளார். சமீபத்தில் நாக சைதன்யா அமீர்கானுடன் இணைந்து ”லால் சிங் சட்டா” என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், அமீர்கானைதான் கங்கனா குறிப்பிட்டு பேசியதாக சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.