எனக்கு இது இரண்டாவது திருமணம்: சமந்தா அதிரடி!!
நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி திருமணம் முடிவாகி உள்ளது.
இருவரும் இந்து, கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் முடிந்ததும் ஐதராபாத்தில் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அரசியல் பிரமுகர்கள், நடிகர் நடிகைகள் மற்றும் உறவினர்களுக்கு சமந்தாவும் நாக சைதன்யாவும் நேரில் சென்று திருமண அழைப்பிதழ்கள் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமந்தா தனது காதல் மற்றும் திருமணத்தை பற்றி பேசியுள்ளனர். அவர் கூறியதாவது, தெலுங்கில் முதல் படத்தில் நாக சைதன்யா ஜோடியாக அறிமுகமானேன். அவரின் முதல் பார்வையிலேயே அவர் மீது காதல் வயப்பட்டு விட்டேன்.
மனதளவில் எங்களுக்குள் முதல் திருமணம் எப்போதோ முடிந்து விட்டது. வெளி உலகத்திற்காகதான் இப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என கூறினார்.