திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (16:07 IST)

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா?

வழக்கமாக சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களாக எந்தவொரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் அவர் தோல் சம்மந்தமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. அதனால் தான் அவர் புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை என்று வதந்திகள் கிளம்பின.

இது பற்றி சில தினங்களுக்கு முன்னர் பதிவிட்ட அவர் மையோசிட்டிஸ் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு பிரச்சனையில் இருப்பதாகவும், அதில் இருந்து இப்போது குணமாகி வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் அவர் சீக்கிரம் குணமாகி வரவேண்டும் என நம்பிக்கை வார்த்தைகளை பகிர்ந்திருந்தனர்.

இதையடுத்து அவர் சமீபத்தில் ரிலீஸ் ஆன அவரின் யசோதா படத்தின் ப்ரமோஷன் பணிகளில் கலந்துகொண்டார். இந்நிலையில் இப்போது சமந்தாவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.