வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 20 நவம்பர் 2022 (09:22 IST)

யசோதா வெற்றி… நன்றி தெரிவித்து சமந்தா உருக்கமான பதிவு!

சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள யசோதா திரைப்படம் இரு நாட்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது. இந்த படம் வாடகைத்தாய் சம்மந்தப்பட்ட கதைக்களமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் ஆகியவை மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தன.

டிரைலரில் சமந்தாவின் அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளன என்பதும் கர்ப்பிணியாக இருக்கும் அவர் தனது குழந்தைக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முயற்சிகளின் காட்சிகள் அபாரமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

விமர்சனங்கள் கலவையாக வந்தாலும், இந்த படத்துக்கு நல்ல வசூல் கிடைத்தது. அதிலும் தமிழை விட தெலுங்கில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளது. இதையடுத்து சமந்தா இந்த வெற்றிக்கு நன்றி தெரிவித்து ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் தன்னுடைய சக நடிகர்கள் அனைவருக்கும் உருக்கமான பதிவை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.