1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (07:49 IST)

பார்த்திபனின் டீன்ஸ் படத்தின் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும் பார்த்திபனின் வித்தியாச முயற்சி ரசிகர்களைக் கவர்ந்தது.

இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார் பார்த்திபன். இந்த படத்தில் அவர் டீனேஜ் வயது இளைஞர்களின் வாழ்க்கையை சொல்ல உள்ளாராம். படத்துக்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் பார்த்திபனே தயாரிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றது. அதையடுத்து நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்நிலையில் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சக்தி வேல் கைப்பற்றியுள்ளார்.