வியாழன், 10 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (23:00 IST)

வெளிநாட்டு இசை நிகழ்ச்சியில் கலக்கிய அனிருத்!

Aniruth
தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர் அனிருத். இவர் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
 
இப்படத்தை அடுத்து, கத்தி, காக்கிச் சட்டை, ஜெயிலர், பிகில், லியோ, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜவான் படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
 
தற்போது தலைவர் 171 படத்திலும், இந்தியன் 2 படத்திலும் இசையமைத்து வருகிறார்.
 
இந்த நிலையில், பட வேலைகள் ஒருபுறம் இருந்தாலும் அனிருத் வேர்ல்ட் டூர் சென்றுள்ளார். அதாவது இங்கிலாந்து நாட்டில் பிரபல ஸ்டேடியத்தில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் 20 ஆயிரம் பேர் பங்கேறும் நிகழ்ச்சியில் 15 ஆயிரம் பேர் வருகை புரிந்ததாகவும், நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாம்.

இதுவரை ஹாலிவுட், பாலிவுட் படங்கள் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகள் மட்டும்தான் அங்கு நிகழ்ச்சி நடந்த நிலையில் ஒரு தென்னிந்திய சினிமா நிகழ்ச்சி நடைபெற்றதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது அனிருத் டீம் மகிழ்ச்சியில் உள்ளனராம்.