வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (22:26 IST)

பாலியல் சாமியாருக்கு பத்ம விருதா? அந்த 4208 பேரை என்ன செய்யலாம்?

சமீபத்தில் கற்பழிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 20ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தேரா சச்சா சவுதா அமைப்பின் சாமியார் ராம் ரகீம் சிங்கிற்கு 2017ம் ஆண்டுக்கான பத்ம விருது வழங்க வேண்டும் என 4,208 பேர் பரிந்துரை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த 4208 பேர்களை என்ன செய்யலாம் என்று டுவிட்டர் பயனாளிகள் கேள்வி மேல் கேள்வி கேடு வருகின்றனர்.



 
 
ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுக்குரிய நபர்களை தேர்வு செய்ய பரிந்துரை செய்ய மத்திய அரசு கோரும். இந்த ஆண்டு மொத்தம் 18768 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதில் சாமியார் ராம் ரகீம் சிங்கிற்கு பத்ம விருது கொடுக்க 4208 பேர் பரிந்துரை செய்திருந்தனர்.
 
இந்த பரிந்துரைகள் அனைத்துமே அவரது ஆசிரமம் உள்ள பகுதியில் இருந்துதான் வந்துள்ளது. அவரது சீடர்களே பெரும்பாலும் பரிந்துரை செய்துள்ளனர். இவை எல்லாவற்றையும் விட பெரிய காமெடி ராம்ரகீம் சிங்கே 5 முறை தனக்கு பத்ம விருது கொடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளார்.