ஜெயம் ரவி பட நடிகையை கொல்ல முயற்சித்து தப்பியோடிய மாமியார்!

Last Updated: சனி, 27 ஜூலை 2019 (16:05 IST)
தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை கவுண்டர், வேதம், மானஸ்தன், ஆதிபகவன்  உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்ககளில் நடித்த  சாக்ஷி சிவானந்த், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்ககளில் குணசித்திர வேடங்ககளில் நடித்து தன்னை அடையாள படுத்திக்கொண்டார். 


 
இவரது தங்ககையும் நடிகையுமான ஷில்பா சிவானந்த் தன்னையும், தனது தாயாரையும் அக்காவின் மாமியார் கொல்ல முயற்சித்ததாக தனது பேஸ்புக்கில் பரபரப்பு புகார் ஒன்றை பதிவிட்டுள்ளார். 
 
அதாவது,  ‘சில மாதங்களுக்கு முன் எனது அக்காவின் மாமியார் "பாவனா பிரம்பாஹாட்" மீது எனது அம்மா போலீசில் கொலை முயற்சி புகார் அளித்தார். ஆனால், மறுநாளே அக்காவின் மாமியார் அமெரிக்கா கிளம்பி சென்றுவிட்டார். இந்த விசாரணைக்காக தொடர்ந்து பலமுறை போலீசார் எனது அம்மாவை அழைத்து தகவல் கேட்டு வருகின்றனர் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்  ஷில்பா சிவானந்த். 
 
மேலும்  நீங்கள் செய்த தவறுக்கு என் அம்மாவுக்கு தண்டனையா ? நீங்கள் எப்போது இந்தியா வந்தாலும் கொலை முயற்சி வழக்கை எதிர்கொள்ள வேண்டும்’ என்று  காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :