வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 27 ஜூலை 2019 (16:05 IST)

KGF 2 படத்தில் இணைந்த மாஸ் ஹீரோ - உலக சினிமாவே வியந்திடும் போலயே!

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட படைப்பான பாகுபலி தமிழ் , தெலுங்கு சினிமாவுலகில் மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தது. அதனை அடுத்து முதன் முறையாக கன்னட படமொன்று தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதென்றால் அது நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம்.  


 
கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்படும் நடிகர் யாஷ் இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.  அதுமட்டுமின்றி  இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி  கன்னட சினிமா வரலாற்றிலேயே ரூ 200 கோடிக்கும் மேல் வசூலித்து அதிக காலெக்க்ஷனை செய்த படம் என்ற சாதனையை செய்தது.
 
ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. நேற்று கேஜிஎப் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியானது. அதாவது இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 
 
அவர் மட்டும் இப்படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டால் நிச்சயம் இப்படம் வேற லெவலில் ரீச்சாகி உலக சினிமாவையே திரும்பி பார்க்க செய்துவிடும்.