திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2020 (10:16 IST)

30 அண்டர் 30 பட்டியல் – சாய்பல்லவிக்குக் கிடைத்த அங்கிகாரம்!

சாய் பல்லவி

பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை சாய் பல்லவி போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 30 அண்டர் 30 என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களைக் கட்டிபோட்டவர் சாய்பல்லவி. அடிப்படையில் மருத்துவரான இவர் நடனம் மற்றும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக  தென்னிந்திய மொழிகளில் செலக்டிவ்வாக படங்களில் நடித்து வருகிறார்.

பிரேமம் படத்துக்குப் பிறகு பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் எதுவும் அந்த பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இடையில் அவர் நடித்த மாரி 2  படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூட்யூப்பில் மெஹா ஹிட் ஆனது. யுட்யூபில் அதிக நபர் பார்த்த பாடலாக ரௌடி பேபி உள்ளது. அதில் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையான போர்ப்ஸ் 30 வயதுக்குள் பிரபலமான 30 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நடிகை சாய்பல்லவியும் இடம் பிடித்துள்ளார். இதுகுறித்த செய்தியைப் பகிர்ந்துள்ள சாய்பல்லவி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.