1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 மார்ச் 2019 (10:27 IST)

இந்திய லெவலில் சாதனை படைத்த ரவுடி பேபி சாங்!!!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் 'மாரி 2' படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. 
 
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் 'ரவுடி பேபி' என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'ரவுடி பேபி' பாடலின் வீடியோவை யூ-டியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டார்கள். 
 
இப்பாடல் பெரும் வைரலாக பரவியது. மேலும், பில்போர்ட் இசைப் பட்டியலும் இடம்பெற்று சாதனை புரிந்தது. கடந்த ஜனவரி மாதத்தின் போது தமிழ் சினிமாவில் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த முதல் பாடல் என்ற சாதனையை இப்பாடல் நிகழ்த்தியது. 
 
முன்னதாக 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடல் தான் 91 மில்லியன் பார்வைகளைக் கொண்டு தமிழ் சினிமாவில் அதிக பார்வை பெற்ற பாடலாக இருந்தது.  இச்சாதனையை 'ரவுடி பேபி' பாடல் முறியடித்தது. 
 
இந்தியாவில் வேகமாக 300 மில்லியன் பேர் பார்த்த பாடல் லிஸ்டில் ரவுடி பேபி இரண்டாவது இடத்தில் உள்ளது.