திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 6 மார்ச் 2019 (10:42 IST)

தூக்கி அடிச்ச தூக்குதுரை! இமாலய சாதனையால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த படம் விஸ்வாசம் . இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார்.




அப்பா மகள் செண்டிமெண்ட் காரணமாக படம் பட்டையை கிளப்பியது. இதனால் தமிழகத்தில் 100 தியேட்டரில் 50 நாட்களை கடந்து விஸ்வாசம் ஓடியது.  தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.  இந்நிலையில் விஸ்வாசம் படம் உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 
 
தமிழகத்தில் 139 கோடியும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் இந்தியாவின் பிறபகுதிகளையும் சேர்த்து 18 கோடி வசூல் ஆகியுள்ளதாம். மேலும் வெளிநாடுகளில் 43 கோடி ரூபாய் வசூல் செய்து விஸ்வாசம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே ஒட்டுமொத்தமாக ரூ.200 கோடி வசூல் செய்து விஸ்வாசம் சாதனை படைத்துள்ளது. இதனால் தூக்குதுரை அஜித் வசூலில் தூக்கி அடித்து விட்டதாக தல ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.