வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vm
Last Modified: ஞாயிறு, 3 மார்ச் 2019 (14:36 IST)

தல அஜித்தின் அடுத்த ரிலீஸ் எப்போது?

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கிராமத்து  பொழுது போக்கு படமான விஸ்வாசம் சமீபத்தில் வெளியானது.  வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிவா -அஜித் கூட்டணி 3வது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்தது. ஜனவரி 10ம் தேதி தமிழில் வெளியான இப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது.
தமிழகம் முழுவதும் 100க்கணக்கான திரையரங்குகளில் விஸ்வாசம் படம் 50 நாட்களை கடந்து ஓடியது. கன்னடத்தில் விஸ்வாசம் திரைப்படம் ஜக மல்லா என்ற பெயரில் வரும் 7ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே தெலுங்கில் விஸ்வாசம் திரைப்படம் மார்ச் 1ம் தேதி வெளியாகி இருந்தது. கர்நாடகவில் தெலுங்கு விஸ்வாசம் திரைப்படம் 7ம் தேதி தான் வெளியாக உள்ளது.