1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 ஜனவரி 2022 (11:22 IST)

நடிகையுடன் அதிக நெருக்கம்? விவாகரத்து பின்னணி என்ன?

ஏறத்தாழ 18 ஆண்டுகள் நீடித்த தனுஷ் - ஐஸ்வர்யா திருமண பந்தம் நிறைவடைவதாக இருவரும் வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு, நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்களும் உள்ளனர்.
 
இந்நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இது ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களிடையேயும், சினிமா உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா இயக்கிய 3 திரைப்படத்தின் போது ஸ்ருதிஹாசன் உடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார் தனுஷ். 
 
அந்த சமயத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக பெரும்பாலான பத்திரிக்கை செய்திகள் வெளியானது. எனினும் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த உறவு சுமூக நிலையை எட்டியது.

ஆனால் தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் தனுஷ் ஒரு நடிகையுடன் அதிக நெருக்கம் காட்டுவதாக கிசுகிசுகள் வெளியாகி வரும் நிலையில் இந்த விவாகரத்து செய்தி பூதாகரமான வெடித்துள்ளது.