1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 ஜனவரி 2022 (09:24 IST)

தனுஷுடன் அக்கா விவாகரத்து; தனது டிபியை மாற்றிய சௌந்தர்யா!

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களது விவாகரத்தை அறிவித்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டிபியை மாற்றியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு, நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இது ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களிடையேயும், சினிமா உலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து அவரது தங்கை சௌந்தர்யா தனது முகப்பு புகைப்படத்தை மாற்றியுள்ளார்.

முன்னதாக தனுஷ் உள்ளிட்ட மொத்த குடும்பமும் உள்ள புகைப்படத்தை வைத்திருந்த அவர் தற்போது ரஜினியுடன் அக்கா, தங்கை இருவரும் எடுத்த சிறுவயது புகைப்படத்தை மாற்றியுள்ளார்.