செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (23:50 IST)

தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார் தனுஷ்

நடிகர் தனுஷ்  அவரது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ்.  இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன் உள்ளனர்.

 இ ந் நிலையில்,  இன்று தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கும் ஐஸ்வர்யாவுக்குமான 18 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

இது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.