செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 10 ஜூன் 2019 (17:54 IST)

’கிரேஸி மோகன் ’மீது நான் பொறாமைப்படும் விஷயம் இதுதான் - கமல்ஹாசன்

தமிழ்சினிமாவில் பிரபல கதாசிரியரும், நாடகாசிரியருமான கிரேஷி மோகன் உடல்நலக் குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று பிற்பகலில் அவர் காலமானார். இந்நிலையில்  பிரபல நடிகர் கமல்ஹாசன் கிரேஸி மோகனுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்சினிமாவில் பிரபலமான கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா கிரேஸி மோகன். இவர் ஏராளமான சினிமா படங்களுக்கு சிறப்பாக திரைக்கதை, வசனம் எழுதி புகழ்பெற்றுள்ளார்.
 
குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா படத்திற்கு சிறந்த முறையில் நகைச்சுவையாக வசனம் எழுதி மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசன் படங்கள் என்றாலே அதில் கிரேஸி மோகன் வசனங்கள் பெரும்பாலும் இடம்பெரும். அந்தளவுக்கு கிரேஸி மோகனின் வசனத்துக்கு ரசிகராக இருந்து அவரை அங்கீகரித்து பாராட்டியவர்  நடிகர் கமல்ஹாசன்.
 
தற்போது கிரேஸி மோகன்  குறித்து அவர் கூறியுள்ளதாவது:
 
சகோதரர் பாலாஜியுடன் இணைந்து மோகன் நெற்றியில் கை வைத்து வைத்து அவருக்கு பிரியாவிடை கொடுத்தோம். மோகனின் அற்புதமான கூட்டுக்குடும்பத்திற்கு என்ன ஆறுதல் கூறினாலும் போதாது. கிரேஸி என்பது அவருக்குப் பொருந்தாது. அவருக்கு நகைச்சுவை ஞானி என்ற பட்டமே தகும்.
 
மோகனின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்வுக்கு நானும் துணையிருப்பேன். மோகனின் இழப்பைத் தாங்கிக்கொள்ள மனோதிடம் வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.
 
சாருஹாசன் , சந்திரஹாசன் மோகன்ஹாசன் என வைத்துக்கொள்ள பகிரங்கமாகவே பாசத்தைக் காட்டியவர் மோகன். அவரது மழலை மாறாத மனம்தான் அவர் மீது  பொறாமைப்படும் விஷயம் ! இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
தற்பொழுது ஏராளமான சினிமா பிரபலங்கள் அவரது வீட்டில் அவரது(கிரேஸி மோகன் )பூத உடலுக்கு அஞ்சலி  செலுத்திவருகின்றனர்.