விஜய்யோடு ஜோடி சேரும் இரு கதாநாயகிகள் – தளபதி 64 அப்டேட் !
விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தின் நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் ராஷ்மிகா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் இப்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் முடிய இருக்க தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார். இந்தப்படத்தை மாநகரம், கைதி ஆகியப் படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.
இந்த படத்தை விஜய்யின் உறவினர் ஒருவர் தயாரிக்க இருக்கிறார். இதனையடுத்து இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மற்றும் ராஷிக்கண்ணா ஆகியக் கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.