திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 8 டிசம்பர் 2018 (18:58 IST)

ரஜினிக்கு பயந்தாரா சிம்பு...போட்டியிலிருந்து திடீர் விலகல் ஏன் ..?

சினிமாவில் தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கு திரைப்படம் வெளியாவது என்பது  திருவிழா நடைபெறுவது போலதான் நம் தமிழ்நாட்டில். அன்று மாஸ் திரைப்பட நடிகர்களின் படங்கள் வெளியாகி கல்லா கட்டுவது இயல்பான விஷயமே. ஆனால் எந்த நடிகர்களின் படங்கள் வெளியாவது என்பதுதான் த்ரிலிங் ...
அதேபோல அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படங்களில் பேட்ட, விஸ்வாசம் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஜிவி பிரகாஷின் வாட்ஸ்மேன் ஆகிய படங்கள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்  தற்போது சிம்புவின் படம் இன்னும் ஷூட்டிங் முடியாத காரணத்தால் பொங்களுக்கு ரிலீசாகாது என தெரிகிறது.
 
ஆனால் இதைக் காரணமாக வைத்து  சிம்பு படம் பொங்களுக்கு ரிலீசாகாது என்றாலும் உண்மையில் அஜித் , ரஜினி இருவருடைய பெரிய  படங்கள் ரிலீஸாவதால் தியேட்டர்கள் கிடைக்காது என்பதால்தான் சிம்பு தரப்பினர் இந்த மொக்க காரணத்தை கூறிவருவதாக விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.