ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:39 IST)

டிரிப்ள் வேண்டாம் டபுள் போதும்: சிம்பு பட அப்டேட்

நடிகர் சிம்பு தற்போது வந்த ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் மகத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரேசா ஆகியோர் நடித்து வருகின்றனர். 
 
இந்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார், ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். பொங்களுக்கு படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் சிம்புவின் அடுத்தபடம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. ஆம், கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதுவும் இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. 
 
இதற்கு முன்னர் மன்மதன் படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதன் அடங்காதன் படத்தில் மூன்று வேடங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.