செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (12:20 IST)

2கே கிட்ஸ் vs 90ஸ் கிட்ஸ் மோதல்தான் கதையா? கோபி, சுதாகரின் ‘Oh God Beautiful’ படத்தின் டைட்டில் டீசர் வைரல்!

யுட்யூபில் மிகவும் பிரபலமாக அறியப்படும் கோபி மற்றும் சுதாகர் கிரவுட் பண்டிங் மூலமாக ஒரு படத்தை தொடங்க உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தனர். இதற்காக தங்கள் யூட்யூப் சேனலின் பாலோயர்ஸிடம் இருந்து நிதி கேட்டனர். இதன் மூலம் சில கோடிகள் வரை வசூலானதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படத்தை இன்னும் தொடங்காமல் வேறு ஒரு படத்தை தங்களது பரிதாபங்கள் புரொடக்‌ஷன் மூலமாக தயாரித்து வருகின்றனர். இந்த படம் தொடங்கி ஷூட்டிங் முடிந்த போதும் டைட்டில் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது படத்தின் தலைப்பு ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ என்று அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது. டைட்டில் டீசர் அனிமேஷன் வடிவில் அனிமேஷன் வடிவில் மூன்று குரங்குகள் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 90 ஸ்கிட்ஸ்களின் பிரதிநிதியாக ஒரு குரங்கும், ஜென் Z கிட்ஸ்களின் பிரதிநிதியாக ஒரு குரங்கும் இடம்பெற்றுள்ளன.

இதில் 90ஸ் கிட்ஸ் குரங்குக்கு காதல் அமைவதில்லை என்பது போல அவரை அடுத்த தலைமுறையினர் காதல் வாழ்க்கைக்கு இழுப்பது போலவும் நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோபி சுதாகர் தங்கள் பரிதாபங்கள் சேனல்களில் செய்த சில எபிசோட்களையே முழுநீளத்துக்கும் 90ஸ் கிட்ஸ் vs 2K கிட்ஸ் மோதல் என ஜாலியாக உருவாக்கியுள்ளனர் என்பது தெரியவருகிறது. படத்தின் டைட்டிலும் அப்போதைய பள்ளிப் பாட பாடலான ‘ஓ காட் பியுட்டிஃபுல்’ என இருப்பது இளைஞர்களுக்கும் மேலும் நெருக்கமாக அமைந்துள்ளது.